1242 தென்றலுக்கு தாய்வீடு பொதிகை


//நீ வலது காலை எடுத்து வைத்து வந்த வேளைதான் .. என் வீடு வாசல் நிழல் கொடுக்கும் தென்னஞ்சோலைதான் .. ஒரு நிமிஷம் கூட நீயும் நானும் பிரிந்ததில்லையே .. நாம் பிரிவு என்னும் சொல்லை கூட அறிந்ததில்லையே
நேற்றல்ல இன்றல்ல நெடுங்காலம் விலகாத சொந்தம் .. மூச்சென்ன பேச்சென்ன நீ இன்றி எனக்கேது பந்தம் .. இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
நான் இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா//
மனம் விட்டு அழவேணுமா? இதோ பாலுஜியின் குரலோடு மனம் இட்டு அழுங்கள்.
படம்: ராஜநடை
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்: விஜயகாந்த், கவுதமி, சரன்ராஜ், ராதாரவி
இயக்குநர்: எஸ்.ஏ.சந்திரசேகர்
தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா
அது திசை மாறி போவது தான் புதுமை அல்லவா
தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா
அது திசை மாறி போவது தான் புதுமை அல்லவா
செந்தமிழின் தாய்வீடு மதுரை அல்லவா
அது தேசம் விட்டு போவது தான் விந்தை அல்லவா
செந்தமிழின் தாய்வீடு மதுரை அல்லவா
அது தேசம் விட்டு போவது தான் விந்தை அல்லவா
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
நான் இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா
அது திசை மாறி போவது தான் புதுமை அல்லவா
நீ வலது காலை எடுத்து வைத்து வந்த வேளைதான்
என் வீடு வாசல் நிழல் கொடுக்கும் தென்னஞ்சோலைதான்
ஒரு நிமிஷம் கூட நீயும் நானும் பிரிந்ததில்லையே
நாம் பிரிவு என்னும் சொல்லை கூட அறிந்ததில்லையே
நேற்றல்ல இன்றல்ல நெடுங்காலம் விலகாத சொந்தம்
மூச்சென்ன பேச்சென்ன நீ இன்றி எனக்கேது பந்தம்
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
நான் இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா
அது திசை மாறி போவது தான் புதுமை அல்லவா
உன் மனதில் போட்டு பூட்டி வைத்த சேதி என்னவோ
அதை மௌனமாக மறைத்து வைத்த நீதி என்னவோ
நீ நிலவு போல தேய்ந்து போக நெஞ்சம் தாங்குமா
உன் நிலமை இன்று தெரிந்த பின்பும் கண்கள் தூங்குமா
நான் கொண்ட பூச்செண்டை நோய் கொண்டு போகாமல் காப்பேன்
என் ஜீவன் நான் தந்து உன் ஜீவன் நலம் வாழ காப்பேன்
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
இன்னும் சொல்லவா... ம்ஹ..ம்ஹா...ம்ஹா..
தென்றலுக்கு தாய் வீடு பாடல் கேட்க இங்கே அழுத்தவும்














